மரதன்கடவலையில் சொகுசு பேருந்து – லொறி மோதி விபத்து ; சாரதி வைத்தியசாலையில் அனுமதி!
Ad Space
Ad Space
யாழ்ப்பாணம் - கண்டி (A9) பிரதான வீதியின் மரதன்கடவல, மிடிவத்த பகுதியில் செவ்வாய்க்கிழமை (21) சொகுசு பயணிகள் பேருந்து ஒன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த சொகுசுப் பேருந்து, வீதியில் வலதுபுறமாகத் திரும்ப முயன்ற போது முன்னால் சென்ற லொறியின் பின்புறத்தில் மோதியதிலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த பேருந்தின் சாரதி சிகிச்சைக்காக கெக்கிராவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மரதன்கடவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Ad Space
Ad Space