மலேசியாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலக கும்பல்களுடன் தொடர்புடைய மூவரை சிறிலங்காவுக்கு அழைத்து வர நடவடிக்கை!
Ad Space
Ad Space
மலேசியாவில் அண்மையில் கைது செய்யப்பட்ட, பாதாள உலக கும்பல்களுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் மூன்று நபர்கள் திங்கட்கிழமை (10) சிறிலங்காவுக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் ரோஹன் ஒலுகல தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினரால், 'UL 317' ரக விமானம் மூலம் மாலை 4.00 மணிக்கு இவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களில் ஒருவர், பிரபல பாதாள உலகக் குற்றவாளியான "காஞ்சிபானி இம்ரான்" என்பவரின் நெருங்கிய சகா எனக் கூறப்படுகிறது.
இவர் மீது சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்தேகநபர்கள் பல கொலை வழக்குகள் மற்றும் பாதாள உலக குற்றச்செயல்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டை வந்தடைந்த பின்னர் அவர்களுக்கு எதிராக மேலதிக விசாரணைகளும் சட்ட நடவடிக்கைகளும் தொடரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Ad Space
Ad Space