மலையக மக்கள் இலங்கையில் கால்பதித்து 200 ஆண்டுகள் நிறைவின் நினைவுத்தூபியில் அஞ்சலி
vidiyel 28 ஆடி 2026 · 15:38 8 views
Ad Space
Ad Space
மலையக மக்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, மாண்புமிகு மலையகம் கூட்டிணைவு ஏற்பாட்டில் தலைமன்னாரில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் இன்று (28) செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தப்படடது.
2023 ஆம் ஆண்டு தலைமன்னாரில் நிறுவப்பட்ட இந்த நினைவுத்தூபியில் மலையக மக்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் மற்றும் மன்னார் பகுதி மக்கள் ஒன்றிணைந்து மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர்.