மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலுக்கட்டியாவை பகுதியில் வீடொன்றிற்கு முன்பாக நபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று வியாழக்கிழமை (10) இரவு வேளையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.மாபாகடவெவ, அபேபுர பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.இக் கொலைக்கான பின்னணி அல்லது இதனைச் செய்த நபர்கள் யார் என்பது தொடர்பிலான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.நீதவான் விசாரணைக்காக உயிரிழந்தவரின் சடலம் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.மேலும், இச் சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் மேலதிக தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.