மானிப்பாய் பிரதேச சபையின் காணியில் திருட்டுச்சம்பவம்
Ad Space
Ad Space
மானிப்பாய் பிரதேச சபையின் காணியில் இருந்த பெறுமதிமிக்க இரும்பு படலையானது நேற்றையதினம் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள குறித்த காணியானது இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டு பிரதேச சபையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் அந்த காணியில் பகல் மற்றும் இரவு வேளை என 24 மணிநேரமும் பாதுகாப்பு ஊழியர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறான சூழ்நிலையில் அந்த படலையானது திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக பிரதேச சபையின் உயர்மட்டத்தால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக பிரதேச சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Ad Space
Ad Space