கடந்த 17ம் திகதி நாட்டில் ஏற்பட்ட மின்சாரத் தடை காரணமாக 400 கோடி ரூபாவிற்கும் அதிக நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இந்த மின்சாரத் தடை காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு 400 கோடி ரூபாவிற்கும் அதிகமான நட்டம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சேதத்திற்கு யார் பொறுப்பு என்பதை கண்டறிய சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார். நாட்டின் பல பகுதிகளில் சுமார் ஏழு மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டிருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மின்சாரத் தடையினால் மின்சார சபைக்கு மட்டும் ஏற்பட்டுள்ள நேரடி நட்டம் 400 மில்லியன் ரூபா என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு மின்சாரத் துறையின் பங்களிப்பை ஒப்பீடு செய்தால் ஒட்டு மொத்த பொருளாதாரத்திற்கும் ஏற்பட்ட நட்டம் 400 கோடி ரூபாவிற்கும் அதிகம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 2025ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9ம் திகதி இதேபோன்றதொரு மின்தடை ஏற்பட்டதாகவும் இந்த சம்பவம் தொடர்பிலும் எவ்வித விசாரணைகளும் நடத்தப்படவில்7லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைவருக்கும் சட்டம் சமமாக அமுல்படுத்தப்படுமானால் இந்த மின்சாரத் தடையினால் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்தும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.