வடமேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல் மற்றும் தென் மாகாணங்களிலும், வடமத்திய மாகாணம் மற்றும் மன்னார் மாவட்டத்திலும் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் 'அம்பர்' நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று சனிக்கிழமை (03) காலை 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல், இன்று இரவு 11.30 மணி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறிப்பிடப்பட்ட மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழையுடன் கூடிய பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
எனவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்கள் மற்றும் சேதங்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.