ஜேர்மனியில் ஆளும் கூட்டணி அரசு, மின்சார வரியைக் குறைக்க திட்டமிட்டுவருவதாக ஜேர்மன் சேன்சலரான பிரெட்ரிக் மெர்ஸ் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவிலேயே, ஜேர்மனியில்தான் மின் கட்டணம் அதிகம் என்கிறது ராய்ச்சர்ஸ் பத்திரிகை

இந்நிலையில், ஜேர்மனியில் மின் கட்டணத்தைக் குறைக்கும் வகையில் ஆளும் கூட்டணி அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தெரிவித்துள்ள சேன்சலர் மெர்ஸ், இன்று அது தொடர்பில் ஒரு முடிவு எட்டப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார். 

அதன்படி, 2027ஆம் ஆண்டில், ஐரோப்பிய குறைந்தபட்ச அளவுக்கு ஜேர்மனியிலும் மின்சார வரியைக் குறைப்பது குறித்து முடிவு எடுக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.