மட்டக்களப்பு, முகத்துவாரம் ஆற்றுப் பகுதிக்கு நேராகக் காணப்படும் ஆழ்கடற்பரப்பில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மிதந்துகொண்டிருப்பதாக மீனவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பாலமீன்மடு பகுதியிலிருந்து படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், கடலில் ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதைக் கண்டு அதனைத் தமது தொலைபேசியில் வீடியோ பதிவு செய்துள்ளனர்.

குறித்த சடலம் கடுமையாக அழுகிய நிலையில் காணப்படுவதால், இது மட்டக்களப்பு, கல்லடி, ஏறாவூர் அல்லது காத்தான்குடி ஆகிய சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகளில் ஏதேனும் ஒரு இடத்தில் கரையொதுங்கக்கூடும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இச் சம்பவம் தொடர்பில் அப்பகுதி பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.