ஈழவிடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் மாவீரர் 2 ஆம் லெப். மாலதியின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழீழப் பெண்கள் எழுச்சி தினமான இன்று சனிக்கிழமை (10.10.2026) காலை-09 மணியளவில் கிளிநொச்சி இரணைமடுச் சந்தியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.    

img_6ac9eb6fb7448.jpgimg_6ac9eba71b555.jpg

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில்  இடம்பெற்ற நிகழ்வில் மாலதியின் உருவப் படத்துக்கு முன்பாக ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டு உருவப் படத்துக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. 

img_6ac9ec52aa185.jpgimg_6ac9ec7139242.jpg

இதேவேளை, மன்னாரில் 1967 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்-04 ஆம் திகதி பிறந்த 2 ஆம் லெப் மாலதி 1987ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்- 10 ஆம் திகதி கோப்பாயில் இந்திய அமைதிப்படைக்கு எதிரான படை நடவடிக்கையின் போது மகளிர் படைப் பிரிவினரை வழி நடாத்திக் கொண்டிருந்த வேளையில் அவருக்கு இரு கால்களிலும் சூடுபட்டுப் படுகாயமடைந்து மிகுந்த இரத்தப்போக்கு ஏற்பட்டு அசைய முடியாத நிலையில் சயனைட் அருந்தி வீரச் சாவைத் தழுவிக் கொண்டார். வீரச் சாவைத் தழுவும் போது மாலதிக்கு 20 வயது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.   

img_6ac9ebe16ba61.jpgimg_6ac9ec0393fe9.jpgimg_6ac9ec2164c1c.jpg