முல்லைத்தீவில் சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டிருந்த மதுபானப் போத்தல்களுடன் சந்தேகநபர் கைது!
vidiyel 15 ஆடி 2026 · 06:31 6 views
Ad Space
Ad Space
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டிருந்த மதுபானப் போத்தல்கள் அடங்கிய தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கோட்டாபய கடற்படைத் நிறுவனத்திற்கு கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், முல்லைத்தீ கடற்படை, முல்லைத்தீவு பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து செவ்வாய்க்கிழமை (14) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஐயாயிரத்து ஐந்நூற்று எழுபத்தைந்து மதுபானப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் மற்றும் சட்டவிரோத மதுபானப் போத்தல்கள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு மதுவரித் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.