முள்ளிவாய்க்கால் 17 ஆம் ஆண்டு தமிழின அழிப்பு வாரம் செவ்வாய்க்கிழமை (12.05.2026) ஆரம்பமாகி எதிர்வரும் மே மாதம்- 18 ஆம் திகதி திங்கட்கிழமை வரை வடக்கு- கிழக்குத் தமிழர் தாயகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இதனையொட்டித் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவுகளைத் தாங்கிய ஊர்திப் பவனி செவ்வாய்க்கிழமை காலை-09 மணியளவில் யாழ் நல்லூரிலுள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபி முன்பாக ஆரம்பமாகிறது.

குறித்த ஊர்திப் பவனி வடக்கு- கிழக்குத் தமிழர் தாயகத்தின் அனைத்துப் பகுதிகளையும் வலம் வந்து இறுதியாக முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மண்ணைச் சென்றடையவுள்ளது.