ஏ9 வீதியில் புளியங்குளம் புதூர் பகுதியில் இன்று (9) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் ஒரு வயது நிரம்பாத குழந்தையும் உயிரிழந்ததோடு, குழந்தையின் தாய் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து அனந்தர் புளியங்குளம் பகுதிக்கு நெல் விதைப்பதற்காக அதிகாலை மோட்டார் சைக்கிளில் தந்தை, தாய், அவர்களது குழந்தை சென்றுகொண்டிருந்தபோது, புதூர் பகுதியில் வாகனம் ஒன்றை முந்திச் செல்ல குறித்த மோட்டார் சைக்கிள் முயற்சித்துள்ளது.
அவ்வேளை எதிரே வந்த வாகனத்தில் மோதி விபத்தில் சிக்கியுள்ளது.
இதன்போது காயமுற்றவர்கள் புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் தந்தையும் குழந்தையும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தந்தை மற்றும் குழந்தையின் சடலங்கள் புளியங்குளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் நடத்தி வருகின்றனர்.