யாழ்ப்பாணம் - வடமராட்சி - நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வைத்து போதை மாத்திரைகளுடன் பிரபல போதைப்பொருள் வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.கரணவாய் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய போதைப்பொருள் வியாபாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடமிருந்து 4 லட்சம் ரூபா பெறுமதியான 520 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன. இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்றைய தினம் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.