அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணக் கம்பன் விழா இன்று வெள்ளிக்கிழமை (30.10.2026) மாலை யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள துர்க்கா மணிமண்டபத்தில் வெகுசிறப்பாக ஆரம்பமாகியது. 

வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இடம்பெற்ற ஆரம்பநாள் நிகழ்வில்  வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தொடக்க உரையாற்றினார். சிறப்புப் பேச்சாளர்களாகத் தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த மரபின் மைந்தன் முத்தையா, புலவர் இரா.சண்முகவடிவேல் ஆகியோருடன், உள்நாட்டு அறிஞர்களான செஞ்சொற்செல்வர்-ஆறு. திருமுருகன், சி.கேசவன், ந.விஜயசுந்தரம், உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். அத்துடன் பேராசிரியர்.சி. சிவலிங்கராஜா, அகில இலங்கைக் கம்பன் கழகத் தலைவர் கம்பவாரிதி இ.ஜெயராஜ்,  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பச்சிலைப்பள்ளிப் பிரதேச செயலர் ஜெயசீலன், கரைச்சிப் பிரதேச செயலர் த.முகுந்தன் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.