யாழ். அலுவலகத்தில் வரிசெலுத்துவோர் அடையாள அட்டை இலக்கத்தை பெற நீண்ட வரிசையில் காத்திருப்பு!
Ad Space
Ad Space
உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் யாழ்ப்பாண அலுவலகத்தில், வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்பதைக் காண முடிகிறது.
இம்மாதம் 30 ஆம் திகதிக்கு பின்னர் இந்த அடையாள இலக்கத்தைப் பெற்றுக்கொள்பவர்களுக்கு அபராதத் தொகை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமையே இதற்குக் காரணமாகும்.
அபராதத்தில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக, யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்த பெருமளவிலான மக்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசைகளில் காத்திருந்து இந்த இலக்கத்தைப் பெற்று வருகின்றனர்.
Ad Space
Ad Space