யாழ்.மாநகர சபையின் புதிய ஆணையாளராக டி.சி.அரவிந்தராஜ் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனால் இன்று செவ்வாய்க்கிழமை (19.05.2026) நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, முன்னதாக யாழ்.மாநகர சபையின் ஆணையாளராகப் பதவி வகித்து வந்த ச.கிருஸ்ணேந்திரன் வடக்கு மாகாணத் தொழிற்துறைத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.