யாழ்.மாவட்டப் பண்பாட்டுப் பேரவையும், யாழ்.மாவட்டச் செயலகமும் இணைந்து வடக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் நடத்தும் யாழ்.மாவட்டப் பண்பாட்டுப் பெருவிழா நாளை வெள்ளிக்கிழமை (23.10.2026) பிற்பகல்-01 மணியளவில் யாழ்.மாவட்டச் செயலகத்தில் யாழ்.மாவட்ட அரச அதிபர்  மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் சிறப்பாக நடைபெறும்.

இந்த நிகழ்வில்  யாழ். மாவட்ட  ஓய்வுநிலை அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீடாதிபதி பேராசிரியர். நாகமுத்து பிரதீபராஜா, வடக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் அலுவலகப் பிரதிப் பணிப்பாளர் திருமதி.தர்சினி நிதர்சன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்வர்.