ரணில், சமன் ஏக்கநாயக்கவுக்கு எதிரான வழக்கு செப்டம்பர் 30 வரை ஒத்திவைப்பு
Ad Space
Ad Space
சுமார் ரூ.1.66 பில்லியனுக்கும் அதிகமான அரச நிதியை தவறாக பயன்படுத்தி, பிரித்தானியாவுக்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (08) புதன்கிழமை கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, பிரதிவாதிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை அடுத்த விசாரணை நாளில் நீதிமன்றத்துக்கு அறிவிக்குமாறு அரச தரப்பு சட்டத்தரணிக்கு நீதிவான் உத்தரவிட்டார்.
அதன்படி, வழக்கு மேலதிக விசாரணைக்காக செப்டம்பர் 30 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Ad Space
Ad Space