‘சுப்ரீம்சாட்’ செயற்கைக்கோள் ஒப்பந்தம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்காக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வர் ரோஹித ராஜபக்ஷ நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினால் இன்று (26) வியாழக்கிழமை அழைக்கப்பட்டிருந்தார்.
நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் முன்னிலையில் ஆஜரான ரோஹித ராஜபக்ஷவிடம், குறித்த செயற்கைக்கோள் ஒப்பந்தம் தொடர்பில் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாக்குமூலப் பதிவுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சற்று முன்னர் அவர் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு வளாகத்திலிருந்து வெளியேறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.