வடகொரியாவின் புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை
Ad Space
Ad Space
ஒலியின் வேகத்தை விட 5 மடங்கு வேகமாக சென்று இலக்கைத் தாக்கும் 'ஹவாசாங்-11 மா' என்ற புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது.கிழக்கு கடற்கரைப் பகுதியில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணைகள் சுமார் 600 கி.மீ தூரம் கடலில் பாய்ந்து விழுந்ததாக தென்கொரிய இராணுவம் உறுதி செய்துள்ளது.வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் தனது மகளுடன் நேரில் சென்று ஏவுகணை சோதனையை பார்வையிட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடுமையான பொருளாதாரத் தடைகளையும் மீறி, வடகொரியா தொடர்ந்து அதிநவீன அணு ஆயுத சோதனைகளை நடத்தி உலக நாடுகளை நடுங்க வைத்து வருகிறது.அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சமீபத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த போதிலும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் புதிய ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
Ad Space
Ad Space