சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை ஆரம்பித்துள்ள நிலையில், அவரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றுள்ளார்.Executive Branch  23 ஆம் திகதி புதன்கிழமை அமெரிக்கா சென்றடைந்த ஷி ஜின்பிங்கையும் அவரது மனைவி பெங் லியுவானையும் வரவேற்பதற்காக ட்ரம்ப் மற்றும் அமெரிக்க முதல் பெண்மணி மெலானியா ட்ரம்ப் ஆகியோர் மேரிலாந்தில் உள்ள அன்றூஸ் விமானப்படைத் தளத்திற்கு நேரில் சென்றனர்.அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் வெளிநாட்டு அரச தலைவரை விமான நிலையத்திற்கே சென்று நேரில் வரவேற்பது வழக்கமான நடைமுறையாக இல்லாத நிலையில், ட்ரம்பின் இந்த நடவடிக்கை அரிதான இராஜதந்திர வரவேற்பாக அமைந்துள்ளது.பொதுவாக வெளிநாட்டு தலைவர்கள் அமெரிக்காவிற்கு வருகை தரும்போது, அவர்களை வெள்ளை மாளிகையில் வைத்து அமெரிக்க ஜனாதிபதி வரவேற்பது வழக்கமாகும்.ஜி ஜின்பிங்கின் இந்த விஜயம் செப்டெம்பர் 23 முதல் 25ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இது ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலத்திற்குப் பின்னர் அவர் மேற்கொள்ளும் அமெரிக்காவின் முதல் அரசுமுறை விஜயமாகும்.இந்த விஜயத்தின்போது அமெரிக்கா – சீனா வர்த்தக உறவுகள், செயற்கை நுண்ணறிவு, பாதுகாப்பு, தாய்வான் மற்றும் முக்கிய கனிம வளங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடவுள்ளனர்.மேலும் கண்டறிகஜோதிடம் சேவைசினிமா செய்திகள்ஆன்லைன் நாளிதழ்விமான நிலைய வரவேற்பின்போது சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டிருந்ததுடன், இராணுவ இசைக்குழுவின் இசை மற்றும் உத்தியோகப்பூர்வ இராணுவ மரியாதைகளும் இடம்பெற்றன. ட்ரம்ப் – மெலானியா தம்பதி, ஜி ஜின்பிங் – பெங் லியுவான் தம்பதியை நேரில் சந்தித்து வரவேற்றனர்.இதனைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் ஜி ஜின்பிங்கிற்கு உத்தியோகப்பூர்வ வரவேற்பு நிகழ்வும், இராணுவ அணிவகுப்பு பார்வையிடும் நிகழ்வும், அரச விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.பல தசாப்தங்களாக அரிதாகக் காணப்பட்ட விமான நிலைய வரவேற்பு நடைமுறையை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ள ட்ரம்பின் இந்த நடவடிக்கை, அமெரிக்கா – சீனா உறவுகளின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் நிகழ்வாக சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.