வடமராட்சி வல்லிபுரம் பகுதியில் மீண்டும் தீப் பரவல்
vidiyel 23 ஆடி 2026 · 04:49 7 views
Ad Space
Ad Space
யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுரம் ஆழ்வார் ஆலயத்தை அண்மித்த மருதங்கேணி- பருத்தித்துறை வீதிக்குத் தெற்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) மாலை விஷமிகளால் மீண்டும் தீ வைக்கப்பட்ட நிலையில் மேய்ச்சல் தரைகள், பனை மரங்கள் ஏராளமாக எரிந்து நாசமாகியுள்ளன.
அண்மைக் காலமாக மேற்படி பகுதியில் அடிக்கடி விஷமிகளால் தீ மூட்டப்பட்டுப் பல ஏக்கர் கணக்கான மேய்ச்சல் தரைகள், வயல்கள், பனை மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளது.