வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் பொன்விழா ஆரம்ப நிகழ்வு வியாழக்கிழமை (14.05.2026) மாலை-04 மணியளவில் யாழ்.வட்டுக்கோட்டையிலுள்ள பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயத்தின் அருகில் வட்டுக்கோட்டை- 50 எழுச்சி மாநாடு ஏற்பாட்டுக் குழுவின்
ஏற்பாட்டில் இடம்பெறும்.
1976 ஆம் ஆண்டு மே மாதம்-14 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50 ஆவது ஆண்டு நினைவாக இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.