பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 09 கிலோகிராம் 229 கிராம் 'ஐஸ்' போதைப்பொருள், 9 கிலோகிராம் 264 கிராம் ஹெரோயின், போதைப்பொருட்களை எடைபோடப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் தராசு மற்றும் ஒரு மடிக்கணினி மற்றும் தொலைபேசி ஆகியவை மீட்கப்பட்டதாகக் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் வத்தளைப் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளில் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.