இடைக்காலத் தடை உத்தரவின் காரணமாக முன்னதாக இடைநிறுத்தப்பட்டிருந்த வனாத்தவில்லு பிரதேச சபையின் தவிசாளர் பதவியைத் தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு புதன்கிழமை (27) நடைபெற்றது.

இந்த வாக்கெடுப்பில், பொது எதிர்க்கட்சியின் ஆதரவுடன் 2 மேலதிக வாக்குகளைப் பெற்று, ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதியான வின்சன் பிரான்சிஸ் தவிசாளர் பதவியை கைப்பற்றினார்.

அதேவேளை, இதில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் 8 வாக்குகளை மட்டுமே பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற உப தவிசாளர் தேர்வில், 11 மேலதிக வாக்குகளைப் பெற்று, பொது எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் துசித லக்மால் உப தவிசாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.