வனாத்தவில்லு மற்றும் கடுவலை பகுதிகளில் இரு சடலங்கள் மீட்பு!
Ad Space
Ad Space
கடுவலை மற்றும் வனாத்தவில்லு ஆகிய பகுதிகளில் நீர் நிலைகளில் இருந்து இரு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று சனிக்கிழமை (20) நண்பகல் வேளையில் இவ்விரு சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், இது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடுவலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகஹவத்த பகுதியில் களனி கங்கையில் ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதாக நேற்று முன்தினம் (20) நண்பகல் பொலிஸாருக்குத் கிடைத்த த கவலின் அடிப்படையில் சம்ப இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். உயிரிழந்த நபர் தித்தபத்தர பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேவேளை வனாத்தவில்லு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வில்லுவாவியில் ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதை பிரதேசவாசிகள் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளன். இதனையடுத்து சடலத்தை மீட்ட பொலிஸார் விசாரணைகள் ஆரம்பித்திருந்தனர். இந்நிலையி்ல் உயிரிழந்த நபர் குறித்த விபரங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இந்த சம்பவங்கள் தொடர்பில் கடுவலை மற்றும் வனாத்தவில்லு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Ad Space
Ad Space