கடுமையான வெப்பம் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அவசர நிதி உதவி வழங்க இருப்பதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. 

வேளாண்மைத் துறை அமைச்சரான Annie Genevard, விவசாயிகளுக்கு 1.1 பில்லியன் யூரோக்கள் அவசர நிதி உதவி வழங்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார். 

அந்த நிதி உதவி, விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்வதற்காகவும், எதிர்கால உற்பத்தியை பாதுகாப்பாதற்காகவும் வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

அந்தத் தொகையில் கிட்டத்தட்ட பாதி, அதாவது, 520 மில்லியன் யூரோக்கள், வறட்சியால் ஏற்பட்ட சேதத்துக்காக அவசர உதவியாக வழங்கப்பட உள்ளது. 

30 மில்லியன் யூரோக்கள், காப்பீடு மூலம் ஈடு செய்ய முடியாத விவசாய இழப்புகளுக்காகவும், 330 மில்லியன் யூரோக்கள், வரி விலக்கு, சமூக பாதுகாப்புக்கான கட்டணம், மற்றும் எரிபொருள் உதவித்தொகைக்காகவும் வழங்கப்பட உள்ளது.

இந்த உதவித்தொகை, அடுத்த வாரம் முதல் வழங்கப்பட இருப்பதாக வேளாண்மைத் துறை அமைச்சரான Annie Genevard தெரிவித்துள்ளார்.