யாழ்.மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் புதிய மதுபானசாலைகளுக்கான அனுமதிகள் வழங்கப்படவுள்ளதாகத்  தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் வலிகாமம் வடக்குப் பிரதேச சபை எல்லைக்குள்ளும் மதுபானசாலைக்கான அனுமதி வழங்கப்படவுள்ளதாக அறிய முடிகிறது.

இந் நிலையில் இதுவரை காலமும் மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் காணப்படும் வலிகாமம்  வடக்கில் மதுபானசாலை அனுமதி வழங்கப்படவுள்ளமையைக் கண்டித்துப் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் மாபெரும் எதிர்ப்புக் கண்டனப்  பேரணி நாளை வியாழக்கிழமை (08.10.2026)  காலை-09  மணியளவில் தெல்லிப்பழைச் சந்தியில் ஆரம்பமாகும். எதிர்ப்புக் கண்டனப் பேரணி தெல்லிப்பழைப் பிரதேச செயலகத்தில் மகஜர் கையளித்தலுடன் நிறைவடையுமென அறிவிக்கப்பட்டுள்ளது.