வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கம், வல்வெட்டித்துறைப் பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்து நடாத்தும் 85 ஆவது மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வானது  ஞாயிற்றுக்கிழமை (29.03.2026) காலை-08.30 மணி தொடக்கம் மாலை-03 மணி வரை வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி மஹால் திருமண மண்டபத்தில் நடைபெறும்.

இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும், ஆர்வலர்களையும் தவறாது கலந்து கொண்டு உயிர்காக்கும் இரத்ததானப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.