வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கத்தின் ஏற்பாட்டில் 86 ஆவது மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (31.05.2026)  யாழ்.வல்வெட்டித்துறை  நெடியகாடு கணபதி மஹால் திருமண மண்டபத்தில் வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கத் தலைவர் பா.வீரசுரேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் 45 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதிக் கொடை வழங்கினர். குருதிக் கொடை வழங்கிய அனைவருக்கும் விசேட கெளரவிப்புக்கள் வழங்கப்பட்டன.