யாழ்ப்பாண மேல்நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜாவின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாதென வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் இன்று திங்கட்கிழமை (01.06.2026) இரவு ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
சமூகத்தில் எழக் கூடிய தேவையற்ற ஊகங்களைத் தவிர்க்கும் பொருட்டும், உண்மை நிலைமையைப் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையிலுமே இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது எனவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.