வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், வவுனியா – மன்னார் வீதிக்கரையில் உள்ள மின்சாரத் தூண்கள் மற்றும் மரங்களில் ரிப்ளக்டிவ் டேப் (ஒளியைப் பிரதிபலிக்கும் ஸ்டிக்கர்) ஒட்டும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் பா. பாலேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம், சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

இரவு நேரங்களில் வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகளின் பார்வைக்கு தூண்களும் மரங்களும் தெளிவாகத் தெரிவதன் மூலம் விபத்துகளைக் குறைப்பதே இச்செயற்பாட்டின் முக்கிய நோக்கமாகும்.