வாழைச்சேனையில் இருந்து காத்தான்குடிக்கு போதைப்பொருள் கடத்திய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் வைத்து 100 கிராம் ஐஸ்போதைப்பொருள் மற்றும் 10 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து காத்தான்குடி பொலிஸார் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகாமையில் கண்காணிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது சம்பவ தினமான இரவு வாழைச்சேனையில் இருந்து பஸ் வண்டியில் வந்து பஸ் தரிப்பிடத்தில் இறங்கிய இரு இளைஞர்களை ஐஸ்போதைப்பொருளுடன் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் பேத்தாழை மற்றும் வாகரையைச் சேர்ந்த 24 , 22 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான நடவடிக்கையை காத்தான்குடி பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வாழைச்சேனையில் இருந்து காத்தான்குடிக்கு போதைப்பொருள் கடத்திய இருவர் கைது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space