விஜயகாந்த் பாதையில் அன்னதான சேவை தொடரும்
Ad Space
Ad Space
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ பக்கத்தில், “விஜயகாந்த் நினைவும், ஆசீர்வாதமும் என்றும் நம்முடன் இருக்கிறது. அவர் காட்டிய மனிதநேயப் பாதையில், ஒவ்வொரு நாளும் அன்னதான சேவையை நாம் தொடர்ச்சியாக செய்து வருகிறோம்.
மக்களுக்காகவே வாழ்ந்த விஜயகாந்தின் லட்சியத்தை என்றும் காப்போம். விஜகாந்த் நினைவைப் போற்றும் வகையில், அவரது ஆசீர்வாதத்துடன் சென்னை கோயம்பேட்டில் உள்ள கேப்டன் ஆலயத்தில் அன்னதான சேவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
‘மக்களுக்காகவே விஜயகாந்த்.. மக்களால் விஜயகாந்த்.. மக்களுக்காகவே வாழ்ந்தவர் விஜயகாந்த்’ என்ற உயரிய எண்ணத்தை நெஞ்சில் சுமந்து, இல்லாதோருக்கும் எளியோருக்கும் உதவும் இந்த தர்மப் பணியை ஒவ்வொரு நாளும் கேப்டன் ஆலயம் தொடர்ந்து செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.
Ad Space
Ad Space