புத்தளம், வனாத்தவில்லு பகுதியில் உள்ள லாஸ்டோஸ் தோட்டத்தில் 2018ஆம் ஆண்டு சட்டவிரோதமாக வெடிபொருட்களை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.

அபுஹனிஃபா முகமது முசிஃப் மற்றும் அமீர் ஹம்சா முகமது ஹமாஸ் ஆகிய இருவருக்குமே இவ்வாறு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு புத்தளம், வனாத்தவில்லு, லாஸ்டோஸ் தோட்டத்தில் சட்டவிரோதமாக வெடிபொருட்களை பதுக்கி வைத்திருந்தமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து கொழும்பு உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.