காலியில் கரந்தெனிய, கிரிபெத்தே பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை (05) காலை வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கரந்தெனிய காவல் துறையினர் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் கரந்தெனிய, கிரிபெத்தே பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடையவர் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
இவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) இரவு அல்லது இன்று காலை கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரந்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வெட்டுக்காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு ; காவல் துறை விசாரணை!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space