அதாவது, வெப்பம் அதிகமாவதால், குளிர்விப்பதற்காக ஏசி முதலான விடயங்களை பயன்படுத்துவதால், எரிபொருள் செலவு அதிகரிக்கும்.
வெப்பத்தால் ஜேர்மனிக்கு பொருளாதார இழப்பு ஏற்படலாம்: ஆய்வு முடிவுகள்
Ad Space
Ad Space
கடும் வெப்பத்தால், ஜேர்மனிக்கு 131 பில்லியன் டொலர்கள் வரை இழப்பு ஏற்படக்கூடும் என ஆய்வமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
Allianz Trade என்னும் ஆய்வமைப்பு மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள், கடுமையான வெப்பம் காரணமாக ஜேர்மனிக்கு 131 பில்லியன் டொலர்கள் வரை இழப்பு ஏற்படக்கூடும் என தெரிவித்துள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் நிலவிய வெப்பத்தின் அளவையொத்த வெப்பம் மீண்டும் திரும்புமானால், 2026க்கும் 2030க்கும் இடையில் ஜேர்மனிக்கு கடும் பொருளாதார இழப்பு ஏற்படக்கூடும் என்கின்றன ஆய்வு முடிவுகள்.
அதிகரிக்கும் வெப்பம், உற்பத்தித்திறனை குறைக்கும் அதே நேரத்தில், எரிபொருள் செலவுகள் அதிகரிக்கக் காரணமாக அமைவதே இந்த இழப்புக்குக் காரணம்.
அவ்வகையில், 2030ஆம் ஆண்டுக்குள், ஜேர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவிகிதம் வரை உற்பத்தி இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
வெப்பம் 30 டிகிரிக்கு மேல் ஒவ்வொரு டிகிரி அதிகரிக்கும்போதும், உற்பத்தி 3 சதவிகிதம் குறையும் அதே நேரத்தில், எரிபொருள் செலவு சுமார் 1.2 சதவிகிதம் அதிகரிக்கும் என்பது கணக்கீடு.
Ad Space
Ad Space