திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேசத்தைச் சேர்ந்த மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு வெருகல் கலாசார மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (21) இடம்பெற்றது. இதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது வெருகல் பகுதியைச் சேர்ந்த 150 மாவீரர் பெற்றோர் மேள தாளங்களுடன் விழா மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டு கௌரவமளிக்கப்பட்டனர்.
மாவீரர்களுக்கு மதிப்பளிக்கு வகையில் தீபச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் மாவீரர் பெற்றோர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.





