நீர்கொழும்பு, கட்டுவை ரயில் நிலையத்தில்தொடர் உந்து  மோதுண்டு காயமடைந்த இத்தாலியப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல் துறையினர்  தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் நேற்று (14) புதன்கிழமை இடம்பெற்றுள்ளதுடன், சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதுண்டு வெளிநாட்டுப் பிரஜை படுகாயமடைந்துள்ளார்.

இதனை அடுத்து, காயமடைந்த நபருக்கு நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 76 வயதுடைய இத்தாலிய நாட்டுப் பிரஜை எனப் காவல் துறையினர் தெரிவித்தார்.