அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இன்று வெள்ளிக்கிழமை (06) நடைபெறவுள்ள தீபாவளி கொண்டாட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பங்கேற்கவுள்ளார்.
இந்து மதத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி, இலங்கை, இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான தீபாவளிப் பண்டிகை எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான வெள்ளை மாளிகையில் இன்று தீபாவளிக் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கலந்துகொள்ளவுள்ளார்.
வெள்ளை மாளிகையில் தீபாவளிப் பண்டிகை கொண்டாடும் பாரம்பரியம் 2003ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 2009ஆம் ஆண்டு வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தீபாவளிக் கொண்டாட்டத்தில் அப்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமா பங்கேற்றார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தீபாவளிக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற முதல் அமெரிக்க ஜனாதிபதி என்ற பெருமையையும் அவர் பெற்றார்.