வெவ்வேறு பகுதியில் திங்கட்கிழமை (06) பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, மாளிகாவத்தை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பகுதியில் 7 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றப் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி, குறிதத்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் நடத்திய விசாரணைகளில் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 200 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.  இது குறித்து மேலதிக விசாரணைகள் மாளிகாவத்தை பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகிறது.

இதேவேளை, கோனஹேன பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலின்பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 156 கிராம் 30 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 52 கிராம் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடவத்தை பகுதியை சேர்ந்த 32 வயதுடையவர் என்பதுடன் மேலதிக விசாரணைக்காக சந்தேகநபர் கம்பஹா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.