"அமைச்சு பதவிகளை ஏற்கும் சட்டரீதியான சாத்தியம் எனக்கில்லை; எனவே கோரிக்கை விடுப்பதில் பயனில்லை" – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா
Ad Space
Ad Space
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தமக்கு அமைச்சு பதவிகளை வழங்குமாறு கோருவதில் எந்தப் பயனும் இல்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் மேலும்,
"இந்தத் தருணத்தில் எவ்வித அமைச்சு பதவியையோ அல்லது பிரதி அமைச்சு பதவியையோ பொறுப்பேற்பதற்கு எனக்கு சட்டரீதியான சாத்தியக்கூறுகள் இல்லை. எனவே, அமைச்சு பதவிகளைப் பொறுப்பேற்குமாறு என்னிடம் கோரிக்கை விடுப்பதிலோ அல்லது எனக்கு அமைச்சு பதவிகளை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோருவதிலோ எந்தப் பயனும் இல்லை." என பதிவிட்டுள்ளார்.
Ad Space
Ad Space