ஸ்பெயின்  மத்தியதரைக் கடலுக்கு மேலே சக்திவாய்ந்த இடியுடன் கூடிய மழை மேகங்களுக்கு மிக உயரமான பகுதியில் ஏற்படும் ஒரு அரிதான மற்றும் கண்கவர் மின் நிகழ்வை வெளிப்படுத்தும் வகையில், வானத்திலிருந்து கீழே விழுவது போலத் தோன்றும் பிரம்மாண்டமான சிவப்பு நிற ஒளித்தூண்கள் அரிய புகைப்படம் ஒன்றில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் கரையோரப் பகுதியில் ஏற்படவிருந்த இடியுடன் கூடிய மழைச் செயல்பாடுகளைத் துல்லியமாகக் கணித்த பிரான்ஸ் புகைப்படக் கலைஞர் புளோரியன் ரியோ கொர்சிகாவி என்பவர்  கல்வி என்ற கிராமத்திற்கு அருகில் வைத்து இந்த விசித்திரமான காட்சியைக் படம்பிடித்துள்ளார்.

தொலைதூர புயல் மேகங்களுக்கு மிக உயரே, விண்வெளியில் இருந்து கீழே இறங்கும் பெரிய ஒளிக்கீற்றுகளைப் போலத் தோன்றும் சிவப்பு நிற, தூண் போன்ற மின்னல்களை இந்தப் புகைப்படம் மிகத்துல்லியமாக காட்டுகிறது.

இந்த அரிய ஒளிர்தல் சில மில்லி நொடிகள் மட்டுமே நீடிக்கக் கூடியது என்பதால், இதை ஒரு புகைப்படக் கலைஞர் கேமராவில் பதிவு செய்தது உலக அளவில் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.