புனித போர் என்று எதுவும் இல்லை, அமைதி மட்டுமே புனிதமானது எனத் தெரிவித்துள்ள பரிசுத்த பாப்பரசர் லியோ உலக நாடுகளிடையே நிலவும் போர்களை மிகக் கடுமையாக கண்டித்துள்ளார்.
இந்தப் போர்களுக்கு மதத்தின் பெயரால் நியாயம் கற்பிப்பதை பாப்பரசர் லியோ சாடியிருக்கிறார்.
இத்தாலியின் அசிசி நகரில் மதத் தலைவர்கள் பங்கேற்ற அமைதிக் கூட்டத்தில் காணொளி ஊடாக உரையாற்றிபோதே பாப்பரசர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் நேரடியாக பங்கேற்க பாப்பரசர் முன்னதாக தீர்மானித்திருந்தபோதும், கடந்த 13ஆம் திகதி அவருக்கு மேற்கொள்ளப்பட்ட நுரையீரல் புற்றுநோய் அறுவை சிகிச்சை காரணமாக தனது பயணத்தை இரத்து செய்ததாக கூறப்படுகிறது.
“அதிகாரத்தை முன்னிறுத்தும் கலாசாரம் மேலோங்கி வரும் இன்றைய காலகட்டத்தில் அசிசியின் அமைதி உணர்வை நாம் வளர்த்தெடுக்க வேண்டியது மிக அவசியம். கடவுளின் பெயரால் ஒருபோதும் போர் நடத்தப்படக் கூடாது. பல போர்களுக்கு தயாராகாமல், உலகின் அனைத்து இடங்களிலும் அமைதியை மீண்டும் நிலைநாட்ட நாம் பாடுபட வேண்டும்” என்றும் அவர் இந்த கூட்டத்தில் மேலும் குறிப்பிட்டார்.