“நீட் ஆட்கொல்லித் தேர்வுக்கு இன்னும் எத்தனை குழந்தைகளை இழப்பது?”
Ad Space
Ad Space
Ad Space
“நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். நீட் ஆட்கொல்லித் தேர்வுக்கு இன்னும் எத்தனை குழந்தைகளை இழப்பது?” என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘நீட் தேர்வின் அச்சம் காரணமாக பல்லாவரத்தைச் சேர்ந்த சாய் அபினவ் என்கிற மாணவர் தற்கொலை செய்துகொண்ட செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். ஏற்கெனவே இரண்டு முறை நீட் தேர்வு எழுதி இருந்த நிலையில், மீண்டும் கோச்சிங் சென்டரில் இணைந்து நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த மாணவர் சாய் அபினவ், இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.ஈடு செய்ய முடியாத இழப்பை எதிர்கொண்டு நிற்கும் மாணவர் சாய் அபினவின் பெற்றோருக்கு என் ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். நீட் ஆட்கொல்லித் தேர்வுக்கு இன்னும் எத்தனை குழந்தைகளை இழப்பது?.குளறுபடிகளும், மோசடிகளும் நிறைந்த நீட் தேர்வை ரத்து செய்வதற்காக கழக அரசு மேற்கொண்ட சட்டப் போராட்டங்களை, இன்றைய ஆட்சியாளர்கள் இன்னும் வேகத்துடன் மேற்கொள்ள வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.’ எனத் தெரிவித்துள்ளார்.
Ad Space
Ad Space
Ad Space