“பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு..! பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை கிழித்தெறி..!” என்கிற தொனிப்பொருளில் அடக்குமுறை சட்டங்களை நீக்கவேண்டும் என கோரி மக்கள் போராட்ட இயக்கத்தினால் இன்று (24) நீர்கொழும்பு நகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மக்கள் போராட்ட இயக்கத்தின் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், பலரும் பதாகைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.