2026 ஆம் ஆண்டுக்கான இறுதி காலாண்டிற்கு மின் கட்டணத் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை  என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

2026 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் தேசிய முறைமை கட்டமைப்பு நிறுவனம்  சமர்ப்பித்த செலவுக் தரவுகளின்படி மின்சார விநியோகச் செலவு 2.88 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆணைக்குழு அவதானித்தது. புதுப்பிக்கப்பட்ட செலவுக் தரவுகள்  2026 நவம்பர் 9 அன்று சமர்ப்பிக்கப்பட்டன.

சமீபத்திய தரவுகள் மற்றும் பொதுமக்களின் கருத்துத் தேடலின் போது சமர்ப்பிக்கப்பட்ட கருத்துக்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, இறுதி காலாண்டிற்கு மின் கட்டணத்தில் எந்தத் திருத்தமும் தேவையில்லை. மூன்றாம் காலாண்டில் நடைமுறையில் உள்ள கட்டண முறை இந்த காலாண்டிலும் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் 36 இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் 29 ஆம் பிரிவின்படி,எதிர்கால மின்சார விநியோகத்திற்கான உத்தேச செலவுக் தரவுகளை ஆய்வுக்காக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம்  சமர்ப்பிக்கும் பணி தேசிய மின்முறைமை கட்டமைப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்தகைய செலவுக் தரவுகளை ஆய்வு செய்தல்,பொதுமக்களின் கருத்துக்களைக் கோருதல் மற்றும் மின் கட்டணங்களைத் தீர்மானித்தல் போன்ற அதிகாரங்கள் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு  வசம் உள்ளன.

2026 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்கான தரவுகளை ஆகஸ்ட் 17, ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு தேசிய மின் முறைமை கட்டமைப்பு நிறுவனத்திடம்  அறிவுறுத்தியுள்ளத.செலவுக் தரவுகள் மின் கட்டணத்தில் 2.88 சதவீதத்தால் சாத்தியமான அதிகரிப்பைக் சுட்டிக்காட்டின. எனினும், பொதுமக்களின் கருத்துத் தேடல் செயல்முறையின் போது சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு, 2026 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்கான மின் கட்டணத்தில் எந்தவொரு திருத்தத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்தது.

மின் கட்டணங்களைத் தீர்மானிக்கும் போது, 2002 ஆம் ஆண்டின் 35 இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுச் சட்டம் மற்றும் 2024 ஆம் ஆண்டின் 36 இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் 29 ஆம் பிரிவின்படி பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்பது சட்டப்பூர்வ தேவையாகும். 2026 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்காக சமர்ப்பிக்கப்பட்ட செலவுக் தரவுகள் தொடர்பாக, மேற்கண்ட விவகாரங்கள் குறித்து பங்குதாரர்களின் கருத்துக்களைப் பெறும் நோக்கில் பொதுமக்களின் கருத்துத் தேடல் நடத்தப்பட்டது.

மதிப்பிடப்பட்ட மின் உற்படிக்கான செலவுத் தரவுகள் மற்றும் உற்பத்தி கலவை,மின் உற்பத்தி ஆற்றல் செலவுகள் எரிபொருள் விலைகள்,மின் உற்பத்தி திறனுக்கான செலவுகள், மின்கல சேமிப்பு முறைமைத் திறனுக்கான செலவுகள்,கடந்த கால வருவாய் உபரிகள் அல்லது பற்றாக்குறைகளுக்கான சரிசெய்தல்,மின் விநியோக நிறுவனத்தின் உபரி வருவாய், மின் கட்டணத் திருத்தச் சதவீதம் தொடர்பில் தொடர்புடைய   பங்குதாரர்களால் சமர்ப்பிக்கப்பட்ட சமர்ப்பிப்புகளைக் கருத்தில் கொண்டு, மின் கட்டணங்களைத் திருத்துவதில்லை என ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.