தமிழகத்​தில் பல்​வேறு சிறைத்​துறை அதி​காரி​களைப் பணி​யிட மாற்​றம் செய்து சிறைத்​துறை கூடுதல் டிஜிபி சங்​கர் உத்​தர​விட்​டுள்​ளார். சென்னை புழல் மற்​றும் தேனி மாவட்​டச் சிறை​யில் இருந்து கைதி​கள் அடுத்​தடுத்து தப்பினர்.

அ​வர்​கள் கைது செய்​யப்​பட்​டாலும் சிறை கைதிகள் தப்​பிய விவகாரம் பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்தி இருந்​தது. இதையடுத்து, தமிழகம் முழு​வதும் சிறைகளில் பாது​காப்​புக் குறித்து ஆய்வு மேற்​கொள்​ளவும், பாது​காப்​புக் குறைபாடுகள் இருப்​பின் அவற்​றைக் கண்​டறிந்து தீர்​வுக் காணவும் நட​வடிக்​கைகள் தீவிரப்​படுத்​தப்​பட்​டன.

இந்​தச் சூழலில், தமிழக சிறைகள் மற்​றும் சீர்​திருத்​தப் பணிகள் துறை​யின் இயக்​குநராக இருந்த டிஜிபி சந்​தீப் ராய் ரத்​தோர் மாற்​றப்​பட்டு அவருக்கு பதிலாக கூடுதல் டிஜி​பியான சங்​கர் சிறைத்​துறை புதிய இயக்​குநராக நியமிக்​கப்​பட்​டார்.

இதையடுத்து, சிறைகளுக்​குச் சென்று ஆய்வு மேற்​கொண்ட அவர் சிறைத்​துறை​யில் நிர்​வாக ரீதி​யாக பல்​வேறு அதிரடி மாற்​றங்​களை செய்து வரு​கிறார்.

அதன் ஒரு பகுதி​யாக கடலூர், மதுரை, சேலம் மத்​திய சிறைகளின் சிறைத்​துறை கண்​காணிப்​பாளர்​களை பணி​யிட மாற்​றம் செய்து சிறைத்​துறை இயக்​குநர் சங்​கர் உத்​தர​விட்​டுள்​ளார்.

அதன் விவரம் வருமாறு: மதுரை மத்​திய சிறை கண்​காணிப்​பாளர் ஆர்.கிருஷ்ணராஜ், சேலம் மத்​திய சிறை கண்​காணிப்​பாளராக இட​மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளார்.

அங்கு ஏற்​கெனவே காலியாக உள்ள பணி​யிடத்​தில் அவர் நியமிக்​கப்​பட்​டுள்​ளார். கடலூர் மத்​திய சிறை கண்​காணிப்​பாளர் ஏ.பரசுராமன், மதுரை மத்​திய சிறை கண்​காணிப்​பாளராக இட​மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளார்.

இதேபோல் சேலம் மத்​திய சிறை கூடுதல் கண்​காணிப்​பாளர் ஜி.வினோத், கடலூர் மத்​திய சிறை கூடுதல் கண்​காணிப்​பாளராக இட​மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளார்.

அங்கு காலியாக உள்ள பணி​யிடத்​தில் அவர் நியமிக்​கப்​பட்​டுள்​ளார். மேலும், இட​மாற்​றம் செய்​யப்​பட்ட அதி​காரி​கள் அனைவரும் உடனடி​யாக தங்​களது புதிய பணி​யிடங்​களில் பணி​யில் சேர வேண்​டும். இவ்​வாறு அவர் கூறியுள்​ளார்.

சிறை​யில் கைதி​கள் தப்​பும் நிகழ்​வு​களை தடுக்​கும் வகை​யில் அப்​பி​ரிவு இயக்​குநரான கூடுதல் டிஜிபி சங்​கர் பல்வேறு தொடர் நட​வடிக்​கைகளை எடுத்து வரு​கிறது. அதன் ஒரு பகுதி​யாக சிறைத்​துறை அங்​காடிகள் தற்​காலிக​மாக மூடப்​பட்​டுள்​ளது.

மேலும், சிறைத்​துறை நடத்​திய பெட்​ரோல் பங்க், சிறை கைதி​கள் தயாரித்து விற்​பனை செய்​யும் கடைகளும் முடக்​கப்​பட்​டுள்​ளன.

மேலும் அனைத்து சிறைச் சாலைகளி​லும் உள்ள கைதி​கள் மாலை 6 மணிக்கு அவரவர்களுக்கு ஒதுக்​கப்​பட்ட சிறை அறை​யில் அடைக்​கப்​பட வேண்​டும்.

7 மணி அளவில் சிறை கைதி​கள் அனைவரும் அடைக்​கப்​பட்​டதை உறுதி செய்​யும் வகை​யில் உயர் அதி​காரி​களுக்கு சிறைத்​துறை​யினர் வீடியோ மூலம் காட்ட வேண்​டும். இதை மேல் அதி​காரி​கள் பார்​வை​யிட்டு உறுதி செய்ய வேண்​டும் என சிறைத்​துறை இயக்​குநர் சங்​கர் உத்​தர​விட்​டுள்​ளார்.