33ஆவது ஆசியான் பிராந்திய மன்றம் : பாகிஸ்தான் துணைப் பிரதமருடன் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு
Ad Space
Ad Space
33ஆவது ஆசியான் பிராந்திய மன்றத்தின் (ASEAN Regional Forum – ARF) கூட்டத்தொடரின் பக்க நிகழ்வாக, வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், பாகிஸ்தானின் துணைப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான முகமது இஷாக் டார்கை (Mohammad Ishaq Dar ) சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின் போது, இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் நட்புறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
அத்துடன், இருநாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை புதிய துறைகளுக்கு விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகம், முதலீடு, கல்வி, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை–பாகிஸ்தான் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், இரு நாடுகளும் தொடர்ந்தும் நெருக்கமான ஒத்துழைப்பை பேணுவதற்கான உறுதிப்பாட்டை இந்த சந்திப்பு மீள உறுதிப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Ad Space
Ad Space